பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:16-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

17. நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

18. நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1