பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:9-12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

9. என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

10. என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.

11. இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.

12. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 2