பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 10:16-29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,

17. அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

18. ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.

19. இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

20. இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும்,

21. ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;

22. பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;

23. லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;

24. பாடகரில் எலியாசியும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;

25. மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;

26. ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்வர்களும்;

27. சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;

28. பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;

29. பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10