பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 23:38-49 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

38. அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

39. அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

40. இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,

41. சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது; என் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.

42. அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.

43. விபசாரங்களில் கிழவியானவளைக் குறித்து அவள் இன்னும் தன் வேசித்தனங்களைச் செய்வாளோ என்றேன்.

44. பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப் பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.

45. ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிறபிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிறபிரகாரமாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.

46. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

47. அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.

48. இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.

49. உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 23