பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 36:1-6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்னும் எலிகூ:

2. நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன் பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.

3. நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.

4. மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.

5. இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.

6. அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 36