பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 3:19-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

19. அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

20. அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.

21. அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

22. அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

23. அவர்களுக்குப் பின்னாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

24. அவனுக்குப் பின்னாக எனாதாதின் குமாரன் பின்னூவி அசரியாவின் வீடு துவக்கி அலங்கத்துக் கோடி வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

25. ஊசாயின் குமாரன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்துக்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகப் பாரோஷின் குமாரன் பெதாயாவும்,

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 3