பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:14-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

14. அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

15. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.

16. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5