பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 19:5-8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.

6. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெம்மைக்கு மறைவானது ஒன்றுமில்லை.

7. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

8. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 19