பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 18:14-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

14. தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

15. அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.

16. உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.

17. என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 18