பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 18:1-11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

2. கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

3. துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.

4. மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

5. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டதன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.

6. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

7. அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.

8. அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.

9. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

10. கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.

11. இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; நீர் கொண்டு கறுத்த கார்மேகங்களையும் தம்மைச்சூழக் கூடாரமாக்கினார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 18