பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 10:4-14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.

5. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கின்றன; தன் எதிராளிகள் எல்லார்மேலும் சீறுகிறான்.

6. "நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

7. அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

8. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.

9. தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

10. திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.

11. " தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்" என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.

12. கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும்.

13. துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி, "நீர் கேட்டு விசாரிப்பதில்லை" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்?

14. அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 10