பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 46:14-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

14. அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொறுபங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.

15. இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.

16. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.

17. அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.

18. அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 46