பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:1-6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொரு நாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,

2. சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:

3. எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு,

4. நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

5. யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி,

6. ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1