பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 8:1-11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,

2. நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.

3. பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.

4. அபிசுவா, நாமான், அகோவா,

5. கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.

6. கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.

7. கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போன பின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.

8. அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,

9. தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,

10. எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.

11. ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 8